ங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
மூக வலைத்தளங்களின் காரணமாக சில தற்கொலைச் சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன.
இதனையடுத்து பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் வாதிகள் பலர் பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் 16 – 18 வயதுகளுக்கு இடையிலான பாடசாலை மாணவ மாணவிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக் இணையத்தளத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தீர்மானித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எமது நாட்டில் எந்த சமூத வலைத்தளங்களும் தடை செய்யப்படாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பௌத்தத்திற்கு முன்னுரிமை - மகிந்த தெரிவிப்பு
அக்கரைப்பற்றில் இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை
அக்கரைப்பற்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று 8ம் பிரிவில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலய விடுதியில் குறித்த இளைஞன் நேற்ற சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று கண்ணகி புரத்தைச்சேரந்த எம்.சாமுவேல் ஜெயராஜ் ( 30 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் மகன் அக்கரைப்பற்று பாடசாலையொன்றில் கற்றுவருவதால் அவரை பிரத்தியேக வகுப்பிற்கு அழைத்துச்சென்று வருவதற்கு வசதியாக தேவாலயத்திற்கு சொந்தமான விடுதியில் பகல் நேரங்களில் தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த விடுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்வம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

சாய்ந்தமருது கடற்கரையில் சிலிண்டர் வடிவில் மர்மப் பொருள்!
அம்பாறை சாய்ந்தமருது பௌசி மைதானத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று மர்மப் பொருள் ஒன்று மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது.
சிலிண்டர் வடிவில் காணப்பட்ட குறித்த பொருளின்மூடியின் உட்பாகத்தில் அடைக்கப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டு காணப்பட்டதனால் இது ஒரு வெடிக்கும் பொருளாக இருக்கலாமென சந்தேகித்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும், மருதமுனை விசேட அதிரடிப் படையினரும் குறித்த பொருள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அறியக்கிடைக்கின்ற
உங்கள் ஆதரவுடன்
சில பல தடைகள் காரணமாக தளம் இயங்காமல் இருந்தது....
ஆனால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ......
உங்கள் ஆதரவுடன்
ஆனால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ......
உங்கள் ஆதரவுடன்

Subscribe to:
Comments (Atom)


