Home » » அக்கரைப்பற்றில் இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை

அக்கரைப்பற்றில் இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை

அக்கரைப்பற்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று 8ம் பிரிவில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலய விடுதியில் குறித்த இளைஞன் நேற்ற சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று கண்ணகி புரத்தைச்சேரந்த எம்.சாமுவேல் ஜெயராஜ் ( 30 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மகன் அக்கரைப்பற்று பாடசாலையொன்றில் கற்றுவருவதால் அவரை பிரத்தியேக வகுப்பிற்கு அழைத்துச்சென்று வருவதற்கு வசதியாக தேவாலயத்திற்கு சொந்தமான விடுதியில் பகல் நேரங்களில் தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த விடுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்வம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
 
Copyright © 2012. battinews . All Rights Reserved.
Company Info | Contact Us | Admin ~New Eastern Media Network | Term of use | Widget | Advertise with Us | Site map
Web page created by New Eastern Media Network(The Leading News portal in Eastern Province)